News May 28, 2024
கல்லூரியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News August 22, 2025
சென்னை தினம்: அமைச்சர் வாழ்த்து

சென்னை தினத்தையொட்டி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், மெரினா கடல் அலைகள் முதல் நவீன ஐ.டி.சாலைகள் வரை நம் சென்னை வளர்ச்சி (ம) மனிதநேயத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்நாளில் நம் நகரின் பயணத்தை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். வந்தாரை வாழ வைக்கும் நம் சென்னை எனப் பதிவிட்டுள்ளார்.
News August 22, 2025
சென்னை தினம்: CM ஸ்டாலின் வாழ்த்து

சென்னை தினத்தையொட்டி CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என பதிவிட்டுள்ளார்.
News August 22, 2025
திடீரென ஸ்தம்பித்த GST சாலை

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.