News February 16, 2025
கல்லால் அடித்து பெண் கொலை கணவா் கைது

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நேற்று (05.03.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் , மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
News March 6, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ரா.மணிகண்டன்(38) புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா் . அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News March 6, 2026
விழுப்புரம்: ராமதாஸின் திடீர் ஆலோசனை

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திரளாக பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


