News March 28, 2025

கல்யாண பாக்கியம் தரும் பேளூர் கோயில்!

image

சேலம்: பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவர் தான்தோன்றீஸ்வரர் (சிவன்),இறைவி தர்மசம்வர்த்தினி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கல்யாண விநாயகருக்கு மாலை,தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும். மனமுருக வேண்டினால் கல்யாணம், குழந்தை பாக்கியம் கிட்டும்.

Similar News

News March 31, 2025

வாழப்பாடியில் ஏப்.5- ல் ஜல்லிக்கட்டு!

image

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரத்தில் வரும் ஏப்ரல் 05- ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. 500-க்கும் மேற்பட்ட காளைகள், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

News March 31, 2025

சேலம் TIDEL Parkல் வேலை

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 31, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் (மார்ச்.31) இன்றைய முக்கிய நிகழ்வுகள். ▶️ காலை 6 மணி முதல் ரமலான் பண்டிகை ஒட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை. ▶️காலை 9 மணி மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய சிறைச்சாலை முன்பு நினைவுச்சுடர் ஓட்டம் துவக்கம். ▶️காலை 10 மணி சூரமங்கலத்தில் எடப்பாடியார் நீர் மோர் பந்தல் திறப்பு. ▶️காலை 10 மணி சீலநாயக்கன்பட்டியில்அச்சு குழுமத்தை அமைச்சர் பார்வையிடுகிறார்.

error: Content is protected !!