News January 28, 2025
கல்குவாரி விபத்து எதிரொலி: கலெக்டர் அறிவுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய நீரில் குளிக்க, துணி துவைக்க சிறுவர்கள், பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. கல்குவாரிகளில் நீராடுதல், விளையாடுதல், துணி துவைத்தல், கால்நடைகளை மேய்த்தல் என பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். கல்குவாரிகளுக்குள் சென்று விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
Similar News
News November 11, 2025
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

திருப்பூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 11, 2025
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(20). இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் நேற்று முந்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகள் அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் 3 சிறந்த பள்ளிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏரகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாராபுரம் வட்டம் காரத்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.


