News September 2, 2025

கல்குவாரிகளின் அளவீடு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி, புளியறை ஜமீன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 45 குவாரிகளில் 17 குவாரிகள் அளவீடு செய்யப்பட்டன. நீதிபதிகள், 17 குவாரிகளின் அறிக்கையை செப்.9க்குள் தாக்கல் செய்யவும், மீதமுள்ளவற்றை 4 வாரங்களுக்குள் அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Similar News

News September 3, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.2) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

image

தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) மேளா சேர்க்கை முகாம் (செப்.08) அன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சி மேளா முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.

News September 2, 2025

நெல்லை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுரை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருட்கள் பயிர்களின் இலைகள் மற்றும் காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வேண்டுகோள்.

error: Content is protected !!