News November 20, 2024
கலை பண்பாட்டுத் துறை விருதுக்கு விண்ணப்பம்

காஞ்சிபுரத்தில், கலை பண்பாட்டுத் துறை விருது வழங்கப்பட உள்ளது. ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள், தங்களது கலைப் படைப்புகளை தன் விபரக்குறிப்புடனும், படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடனும், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம், (காது கேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகில்), ஓரிக்கை அஞ்சல் என்ற முகவரிக்கு வரும் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News August 22, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களில் பெயர் மாற்றம் உரிமையாளர் பெயர் மாற்றும், பதிவு போன்றவை இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைக் முகாம் வரும் ஆக.23-ம் தேதி சிப்காட் மாம்பாக்கம் மற்றும் திருமுடிவாக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
உழைக்காமல் பலன் பெற நினைப்பது ஊழல்: இபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியில் நேற்று இபிஎஸ் பிரச்சார பயணம் மேற்கொண்டார். அதில் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பகுதியில் உரையாற்றிய போது, விஜய் ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைப்படுவது தவறல்ல, ஆனால் இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல் என கடுமையாக குற்றம் சாட்டினர்.
News August 22, 2025
காஞ்சிபுரம்: VAO, தாசில்தார் லஞ்சம் கேட்டால்? CALL பண்ணுங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dspkpmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 044-27237139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.