News November 7, 2025
கலைத்தாயின் செல்ல மகனுக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என பாடிய சிறுவன்தான்,
இந்திய சினிமாவுக்கே Dictionary-யாக மாறுவார் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நடிப்பில் மட்டும் உச்சம் தொட்டதால், அவரை விண்வெளி நாயகன் என புகழவில்லை. அந்த விண்வெளியில் மின்னும் நட்சத்திரங்கள் போல எழுத்து, இயக்கம், எடிட்டிங், தயாரிப்பு, மேக்கப் என அத்தனை துறைகளிலும் பிரகாசித்து கொண்டிருப்பவர். உங்களுக்கு பிடிச்ச கமல் படம் எது?
Similar News
News February 1, 2026
பட்ஜெட் எவ்வளவு நேரம் தாக்கல் செய்யப்பட்டது தெரியுமா?

FM நிர்மலா தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மொத்தம் 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 1 மணி நேரம் 17 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2024-ல் (இடைக்கால பட்ஜெட்) 56 நிமிடங்கள், 2023-ல் 87 நிமிடங்கள், 2022-ல் 92 நிமிடங்கள், 2021-ல் 1 மணி நேரம் 40 நிமிடங்கள், 2020-ல் 2 மணி நேரம் 41 நிமிடங்களும் பட்ஜெட் உரையை அவர் வாசித்திருந்தார்.
News February 1, 2026
வெள்ளி விலை ஒரே வாரத்தில் ₹1.05 லட்சம் குறைந்தது

கடந்த ஒரு வாரத்தில் (ஜன.26 – பிப்.1) மட்டும் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ₹1.05 லட்சம் குறைந்துள்ளது. ஆனால், வாரம் தொடங்கியது முதலே கிலோவுக்கு ₹50,000 வரை அதிகரித்த வெள்ளி விலை, கடந்த 2 நாள்களாக குறைந்துள்ளது. இதன்படி, ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு வெள்ளி விலை ₹105 வரை குறைந்து ₹320-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையும் குறைந்துள்ளதால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.
News February 1, 2026
பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் குறைந்து 80,663 புள்ளிகளிலும், நிஃப்டி 638 புள்ளிகள் குறைந்து 24,780 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. பங்குகளை வாங்குவது, விற்பதற்குமான வரி உயர்வால் முதலீட்டாளர்கள் பீதியடைந்துள்ளனர். பங்குகளை வாங்கி விற்பதற்கான வரி 0.02%-லிருந்து 0.05% அதிகரிக்கப்படும் என FM நிர்மலா தெரிவித்துள்ளார்.


