News November 7, 2025
கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து: CM ஸ்டாலின்

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் X தள பதிவில், பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டுள்ள கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து என வாழ்த்தியுள்ளார்.
Similar News
News February 1, 2026
பிரபல வில்லன் நடிகர் ஜெரார்டோ காலமானார்

பிரபல மெக்சிகன் நடிகர் ஜெரார்டோ டாரசெனா (55) காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை. ‘அபோகலிப்டோ’ படத்தில் வில்லன் ரோலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளம். மேலும், மேன் ஆன் ஃபயர், தி மெக்சிகன் உள்ளிட்ட படங்கள், நார்கோஸ் வெப் சிரீஸ் மூலம் அவர் உலகளவில் சிறந்த நடிகராக அங்கீகாரம் பெற்றார். சுமார் 50 படங்கள், டிவி தொடர்களில் ஜெரார்டோ நடித்துள்ளார்.
News February 1, 2026
கனிம வளங்களை சுருட்டும் பட்ஜெட்: கனிமொழி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். என்ன செய்தாலும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லைஎன்பதால் தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தை பாஜக புறக்கணித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் கொடுக்காமல், நமது கனிமவளங்களை சுருட்டக்கூடிய பட்ஜெட்டாக இது உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News February 1, 2026
திமுக தான் ஒரே சாய்ஸ்? குழப்பத்தில் OPS தரப்பு

ADMK கதவை EPS ஒரேயடியாக அடைத்துவிட்டதால், திமுகவில் இணையலாம் என OPS-யிடம் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சென்றால், OPS-க்கு அமைச்சர் பதவி கிடைப்பதோடு ஆதரவாளர்கள் சிலரும் MLA ஆகலாம் என யோசனை சொன்னார்களாம். அதேநேரம், TVK உடன் கூட்டணி அமைத்தால், அதிமுக தோற்பதற்கு காரணமாக இருப்போமே தவிர நமக்கு எந்த பலனும் இல்லையென்றும் நிர்வாகிகள் கூறினார்களாம். என்ன முடிவெடுப்பார் OPS?


