News August 12, 2024

கலைஞர் கருணாநிதி சிறப்பு நாணயம்

image

திருவாரூரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் மத்திய அரசாங்கத்தால் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News March 7, 2026

திருவாரூர்: அதிமுக தேர்தல் பணிமனை அமைக்கும் பணி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பந்த கால் முகூர்த்த விழா நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

திருவாரூர்: 412 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முழுவர்கும் பறிமுதல் செய்யப்பட்ட 412 கிலோ குட்கா போன்ற போதைப் பொருட்கள், நெய்விளக்கு பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் அடுக்கி வைத்து தீ மூலம் அழிக்கப்பட்டது.

News March 7, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!