News June 29, 2024
கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக பகுதியில் வீடு பழுது நீக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். இதில் அரசு விதிகளின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 10, 2025
திருவாரூர் காவல் துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு: “GET UNLIMITED INTERNET OFFER FOR ONE YEAR. SEND THE 6 DIGIT CODE TO THIS NUMBER” இது போன்ற குறுஞ்செய்தி மூலம் கேட்கப்படும் OTP எண்களை பகிர வேண்டாம். குற்றவாளிகள் மற்றும் மோசடி இணைய தளம் மூலம் வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே OTP எண்களை பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
News September 10, 2025
திருவாரூர்: விருது பெற்ற ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் த.சூரியகுமார். இவர் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த நிலையில், ஆசிரியர் சூரியகுமாரை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
News September 10, 2025
திருவாரூர் மாவட்டம் உருவான கதை

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW