News June 3, 2024
கலைஞரின் பிறந்தநாளை விழா கொண்டாட்டம்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கினர்.
Similar News
News February 7, 2026
செங்கல்பட்டில் பாதிப்பட்டுள்ள 10 கிராமங்கள்

செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 9 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் மெத்தனத்தால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டியுள்ளது. கழிவுநீர் தேங்கி குப்பை மேடாக மாறியுள்ள இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News February 7, 2026
செங்கை: 5 பேர் அதிரடி கைது!

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 23 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாக்களை பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் பதுக்கி வைத்து கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாக்களின் மதிப்பு 23 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
செங்கை: ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு!

படப்பை அருகே, முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷ் (25) என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய விமல், மகேஷ், திவாகர் மற்றும் சிவா ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


