News April 12, 2024
கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ந.சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 30, 2025
பத்திரிக்கை வைக்க சென்ற மூதாட்டி விபத்தில் உயிரிழப்பு

பெரம்பலூரைச் சேர்ந்த சுரேஷ் – அனிதா தம்பதி, இவர்களின் இல்ல காதணி விழாவிற்கு மாமியார் வெண்ணிலாவுடன் 3 பேரும் உறவினர்களுக்குப் பத்திரிக்கை வைக்க இருசக்கர வாகனத்தில் சென்றனர். சின்ன சேலம் சாலையை கடக்க முற்பட்டபோது சென்னை நோக்கி வந்த கார் மோதியதில் வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்குறித்து சின்ன சேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்
News April 29, 2025
பெரம்பலூரில் உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம்

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகளளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஷ் பஞ்சால் உத்தரவின்படி உழைப்பாளர் தினமான (மே.01) அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது, கிராம சபையில் ஊராட்சி கிராம மக்களின் குறைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. பெரம்பலூர் மக்களே கிராம சபை கூட்டம் மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News April 29, 2025
பெரம்பலூர் : முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்: பெரம்பலூர் எஸ்.பி- 8826249399, பெரம்பலூர் கூடுதல் எஸ்.பி- 9940163631,9940163631 பெரம்பலூர் துணை எஸ்.பி – 9498149862 மங்களமேடு டி.எஸ்.பி – 9498166346,மாவட்ட குற்றப் பிரிவு- 9498144724. காவல் உயர் அதிகாரிகள் எண்கள் தெரியாதவங்களுக்கு மறக்காம SHARE செய்யவும்.