News December 31, 2024

கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 வாயில்கள் மூடல்

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.

Similar News

News October 15, 2025

காஞ்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்..

image

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு கலெக்டர் தீபாவளி வாழ்த்து

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியதுடன், காஞ்சிபுரம் மக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் ஆட்சியர் கலைச்செல்வி.

News October 14, 2025

காஞ்சிபுரம்: அரசு திட்டம் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <>இந்த லிங்க்<<>> மூலம் குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

error: Content is protected !!