News March 3, 2026

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

Similar News

News March 8, 2026

திருப்பூர்: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 8, 2026

பல்லடம் அருகே பயங்கர தீ விபத்து!

image

பல்லடம் அடுத்த அருள்புரம் பாச்சான்காட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் நேற்று திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து வேலை செய்து வந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.

News March 8, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! GOOD NEWS

image

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்களுக்கு செப்டம்பர் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக அந்தந்த பிறப்புப் பதிவு அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு, ரூ.200 கட்டணம் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!