News April 24, 2024
கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது

சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார். அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 29, 2026
கோயம்பேட்டில் தக்காளி கிலோ. 6-க்கு விற்பனை!

கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.
News January 29, 2026
சென்னை: முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம்

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்ட நிலவரம் இன்று (ஜன.29) வெளியிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3381 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 3046 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் 914 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 532 மில்லியன் கன அடி நீர் இருப்பதாக தெரிவித்துள்ளது.
News January 29, 2026
சென்னை: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <


