News May 16, 2024
கலசப்பாக்கம்: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண். வழக்கறிஞரான இவர், தனது நிலம் சம்பந்தமாக கலசப்பாக்கம் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிய நிலையில், எதிர் தரப்பினரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு வீடு புகுந்து வழக்கறிஞர் அருணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
தி.மலை: துணி வியாபாரி துடுதுடித்து பலி!

சென்னையை சேர்ந்த மோகன்(50), துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், வெம்பாக்கம் அருகே உள்ள மானாமதியில் வியாபாரம் முடிந்து சென்னைக்கு செல்வ தற்காக காஞ்சீபுரம் – வந்தவாசி சாலை மெயின் ரோட்டில் செய்யாறு தாலுகா மகாஜனபாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
News February 13, 2026
தி.மலைக்கு வந்த BIG BOSS பிரபலம்

திருவண்ணாமலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அறிமுகமான சௌந்தர்யா, நேற்று (பிப்.12) ஆன்மிக தரிசனம் செய்தார். அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அண்ணாமலை மலைச்சுற்று கிரிவலம் மேற்கொண்டார். அவரைக் கண்ட பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். எளிமையான தோற்றத்தில் வந்த அவர், பக்தி உணர்வுடன் வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
News February 13, 2026
தி.மலையில் 800 பேர் கூண்டோடு கைது

தி.மலை மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் 9 இடங்களில் நடந்தது. தி.மலை, ஆரணி, சேத்துப்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட சுமார் 800 பேரை போலீ சார் கூண்டோடு கைது செய்தனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.


