News April 4, 2025

கலக்கத்தில் மதுரை மக்கள்-காரணம் இதுதான்

image

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News September 18, 2025

மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

image

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

News September 18, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் வளையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை,பாரபத்தி, சோளாங்கூரணி, நல்லூர்,குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வளையப்பட்டி, ம ஒ.ஆலங்குளம், கொம்பாடி, உசிலம்பட்டி, வாலாந்தூர், நாட்டார்மங்கலம், தும்மக்குண்டு, சேடப்பட்டி, காலப்பன்பட்டி, பூசலாபுரம், தங்கலாச்சேரி, அழகுரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

மதுரை: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!