News November 28, 2025

கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக நீடித்து வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

Similar News

News November 28, 2025

டிசம்பர் 2, 3-ந் தேதிகளில் ரேஷன்பொருட்கள் வினியோகம்

image

நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், ரேஷன்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வருகிற டிச. 2-(ம)3-ந் தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக இந்த விலை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

நாமக்கல்லில் நீரிழிவு நோய்க்கான மையம் துவக்கம்!

image

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.28) டைப்-1 நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தினை ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும், மையத்தில் உள்ள டைப்-1 நீரிழிவு நோயால் ஏற்படும் தடுக்கக்கூடிய கண் பார்வை இழப்பை கண்டறிய AI தொழில்நுட்பம் கொண்ட கண் கேமரா, சிறுநீர செயல்பாடு, ஹீமோகுளோபின், தைராய்டு பரிசோதனை சாதனம் உள்ளிட்டவை பல வசதிகளை பார்வையிட்டார்.

error: Content is protected !!