News October 26, 2025
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.101 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.110 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
Similar News
News February 11, 2026
நாமக்கல்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

நாமக்கல் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
நாமக்கல்லில் அடுத்த ஜல்லிக்கட்டு! update

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் – தாண்டகவுண்டன்பாளையத்தில் கடந்த பிப்.7-ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வீர விளையாட்டுப் போட்டி வருகின்ற பிப்.13, 2026 அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வாடிவாசல் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News February 11, 2026
நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


