News June 13, 2024
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை(ஜூன்.14) கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் கறவை மாடு தேர்வு செய்தல், கொட்டகை அமைப்பு, இனபெருக்க மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடைக்களுக்காண அரசு திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சிக்கு வரும் போது ஆதார் அட்டை நகல் கொண்டு வரவும்.
Similar News
News July 9, 2025
போட்டித் தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV) முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, தேர்வுப் பணிகளைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதித்தனர்.
News July 9, 2025
இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News July 8, 2025
ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.