News June 19, 2024
கர்ப்பிணி ஊழியரை பணிநீக்கம் செய்யலாமா?

கர்ப்பிணி பெண் ஊழியர் தொடர்பாக கடந்த 1961ஆம் ஆண்டு பேறுகால பலன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் பெண் ஊழியர் ஒருவர் கர்ப்பமாக உள்ளார் என்ற காரணத்திற்காக அவரை எந்த நிறுவனமும் பணிநீக்கம் செய்யக்கூடாது, அத்துமீறினால் 3 ஆண்டு சிறை எனக் கூறப்பட்டுள்ளது. 10 பேருக்கும் மேல் ஊழியர்களை கொண்ட நிறுவனம், கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 10, 2026
10th போதும், ₹21,000 சம்பளம்.. APPLY NOW

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.20-க்குள் இந்த <
News April 10, 2026
ஸ்டாலின் அளவுக்கு EPS-க்கு தைரியம் இல்லை: OPS

கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே மக்களை நேரில் சந்தித்த ஒரே CM ஸ்டாலின் தான் என OPS கூறியுள்ளார். EPS-க்கு அந்த அளவு தைரியம் இல்லை என்ற அவர், ஆனாலும் நிலைமையை திறமையாக கையாண்டது போல EPS தற்பெருமை பேசுகிறார் என்றார். இவ்வுலகில் அடிப்படை அரசியல் கண்ணியம் கூட இல்லாமல் யாராவது வாழ்கிறார்களானால், அது EPS தான் எனவும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அவர் தோல்வியையே சந்திப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.
News April 10, 2026
வரலாற்றிலேயே முதல்முறை.. வாக்குப்பதிவு உயர்ந்தது

புதுச்சேரி, கேரளா & அசாம் மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் வரலாற்றில் முதல்முறையாக மொத்தமாக 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. 1964-க்குப் பிறகு ஒரு சட்டப்பேரவைத் தேர்தல் ஒன்றில்பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். அதேபோல், அசாமில் 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2016 அசாம் தேர்தலில் 84.67% வாக்குகள் பதிவாகியிருந்தது.


