News November 22, 2025
கர்ப்பிணிகளுக்கு முற்றிலும் இலவசம்..!

பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லும் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல ஊர்தி சேவை திட்டத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. அரசு ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும். அந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு செல்ல சேவை வழங்கப்படாது. இந்த சேவையை பெற, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது 102 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அவசர நேரத்தில் உதவும் SHARE THIS.
Similar News
News February 8, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்திற்கு தேவையான சத்துமாவினை கணக்கிட்டு விடுமுறைக்கு முன்பாகவே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு ரெடியாகிக்கோங்க வாண்டு பசங்களே!
News February 8, 2026
40 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயம் செய்யணும்!

40 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
News February 8, 2026
நாளை இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், மதுக் கடைகள் நாளை 3 மணி நேரத்துக்கு இயங்காது என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பகல் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


