News December 26, 2025

கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்ற பெண்!

image

US-ல் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தது, தெரியாமலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். லோபஸ் (41) என்பவருக்கு கருப்பையில் கரு வளராமல், கல்லீரல் அருகில் வளர்ந்துள்ளது. இதனால், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது. 30,000 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய அரிய கருத்தரிப்பு நடைபெறும், 10 லட்சம் பேரில் ஒருவருக்கே கரு முழுவளர்ச்சி அடையும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 3, 2026

காங்கிரஸுடன் கூட்டணியை விரும்பும் தவெக

image

தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரஸுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என தவெகவின் ஜெரால்டு ஃபெலிக்ஸ் கூறியுள்ளார். தவெக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமைய வேண்டும் என்ற விருப்பத்தையே, <<18740431>>ஜோதிமணியின் கருத்துகள்<<>> பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டணி அமைந்தால் தமிழகத்துடன் சேர்த்து கேரளா, பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸால் வெற்றிபெற முடியும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News January 3, 2026

கிறங்கடிக்கும் அழகில் பாக்யஸ்ரீ போர்ஸ்

image

சித்திர அழகாக வலம் வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவரது சுட்டும் விழி பார்வையால், நேரம் விடியாத காலையாகவும், முடியாத மாலையாகவும் நீடிக்கிறது. மின்னலோ, கனியோ, கவியோ, அமுதோ, சிலையழகோ என எதை குறிப்பிட்டு அழகை ரசிப்பது என்று தெரியவில்லை. உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News January 3, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 3, மார்கழி 19 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11.30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

error: Content is protected !!