News November 26, 2025
கர்நாடக CM ரேஸில் நியூ என்ட்ரியா?

கர்நாடக CM யார் என சித்தராமையா, டி.கே சிவக்குமாருக்கு இடையே போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ரேஸில் மேலும் ஒருவர் இணைந்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெளிப்படையாகவே தான் CM ரேஸில் இருப்பதாக கூறியுள்ளார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியதால், அன்றிலிருந்து இன்றுவரை தான் எப்போதும் CM ரேஸில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2026
ஒரே ஓவரில் 11 பந்துகள்.. மோசமான ரெக்கார்டு!

IPL-ல் ஒரு ஓவரில் அதிக பந்துவீசிய பவுலர் என்ற மோசமான ரெக்கார்டை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். GT-க்கு எதிரான மேட்ச்சில் 4 வைட், 1 நோ பால் உள்பட அவர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசினார். ஏற்கெனவே, RCB சிராஜ் (vs MI, 2023) CSK துஷார் தேஷ்பாண்டே(vs LSG, 2023), LSG ஷர்துல் தாக்கூர் (vs KKR, 2025), RR சந்தீப் சர்மா (vs DC, 2025), MI ஹர்திக் (vs GT, 2025) ஆகியோரும் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர்.
News April 1, 2026
₹200 வரை உயர்ந்த சுங்கக் கட்டணம்

தமிழகத்திலுள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 3% – 5% வரை கட்டணம் உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கார், ஜீப்களுக்கான சுங்கக் கட்டணம் ₹10 வரையிலும், பஸ்கள் & கனரக வாகனங்களுக்கான கட்டணம் ₹40 – ₹200 வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 1, 2026
BREAKING: தவெக வேட்பாளர்கள் மாற்றம்.. விஜய் அறிவிக்கிறார்

தவெக வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாக வந்த சிலருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் விஜய், இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், 3 முதல் 5 தொகுதிகளில் இந்த மாற்றம் இருக்கும் எனவும் பிரபல தனியார் TV செய்தி வெளியிட்டுள்ளது. பட்டியலை இன்று அல்லது நாளைக்குள் இறுதி செய்து விஜய் அறிவிக்க உள்ளாராம். <<-se>>#TNElection2026<<>>


