News December 13, 2025
கர்நாடக முதல்வராகிறாரா டி.கே.சிவக்குமார்?

கர்நாடகாவில் CM நாற்காலிக்காக நடந்த பனிப்போர் முடிந்ததாக கருதப்பட்ட நிலையில், டி.கே.சிவக்குமார் ஆதரவு MLA புதிய குண்டை வீசியுள்ளார். ஜன.6-ல் முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பார் என கணித்துள்ள இக்பால் ஹுசைன், அதற்கு 99% வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியிருந்தனர்.
Similar News
News December 14, 2025
நிதிஷ் குமாருக்கு கூடுதல் அதிகாரம்!

பிஹாரில் புதிதாக உருவாக்கப்பட்ட 3 துறைகளில் விமான போக்குவரத்து துறையை CM நிதிஷ்குமார் தனது வசமாக்கியுள்ளார். இளைஞர் நலன் & வேலைவாய்ப்பு, உயர் கல்வி மற்றும் விமான போக்குவரத்து ஆகிய 3 துறைகள் உருவாக்க கடந்த 9-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 20 ஆண்டுகளாக தனது வசம் இருந்த உள்துறையை நிதிஷ் இழந்த நிலையில், அவரை கூல் செய்ய விமான போக்குவரத்து துறையை பாஜக விட்டுக்கொடுத்ததா என RJD சாடி வருகிறது.
News December 14, 2025
சற்று நேரத்தில் அறிவிக்கிறார் விஜய்

தவெகவில் ஒரு சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று(டிச.14) வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில், 70% பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளாராம்.
News December 14, 2025
நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன்: கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு ₹1020 கோடி ஊழல் செய்ததாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் பெரும் நெருப்பாக பற்றி எரிகிறது. இந்நிலையில், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேருவை குறிவைத்து அடித்தால், இந்த பகுதியில் (திருச்சி) திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜகவினர் வேலை செய்கிறார்கள் எனக் கூறிய அவர், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எந்தத் தவறையும் செய்யமாட்டேன் என்றார்.


