News May 7, 2024
கரைசுத்துபுதூரில் போலீசார் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 7) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 27, 2025
நெல்லை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

நெல்லை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க..
News December 27, 2025
நெல்லை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
News December 27, 2025
திசையன்விளையில் வித்தியாசமான வாழைப்பழம்

திருநெல்வேலி மாவட்டம் பல்வேறு இடங்களில் வாழை பயிரிடப்பட்டு உள்ள நிலையில் திசையன்விளையில் விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த வித்தியாசமான வாழை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே வாழைத்தாரில் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் வாழைப்பழம் காணப்பட்டதால் பொதுமக்கள் உடனடியாக போட்டி போட்டு அவற்றை வாங்கி சென்றனர்.


