News September 28, 2025
கரூர்:10ஆயிரம் பேருக்கு அனுமதி; மீறப்பட்டதால் துயரம்

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் இன்று (செப். 27) நடைபெற்ற த.வெ.க. கூட்டத்திற்கு, 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று போலீஸிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் கூட்டத்தில் மீறப்பட்டன. இதன் காரணமாக ஏற்பட்ட அதிக நெரிசல் (Stampede) காரணமாகவே இந்தத் துயரமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
தான்தோன்றிமலை: வயிற்று வலியால் நேர்ந்த சோகம்

கரூர், தான்தோன்றிமலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த அகமது தூபி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியின் காரணமாக இருந்த நிலையில் நேற்று மன விரக்தியில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 2, 2026
கரூர்: மின் தடையா? உடனே அழைக்கவும்

கரூர் மாவட்டத்தில் மழை மற்றும் பல்வேறு காரணங்களுக்கு மின்தடை ஏற்படுகிறது. அவ்வாறு மின்தடை ஏற்படும்போது 1912 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 94458 50811 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். TNEB மொபைல் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க
News January 2, 2026
கரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)


