News November 7, 2025

கரூர்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

1) கரூர் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இந்த தகவலை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 21, 2026

கரூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

குளித்தலை அருகே பயங்கர விபத்து!

image

கரூர் மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த நவீன்குமார் (22), கடந்த வாரம் தான் வாங்கிய புதிய உயர்ரக பைக்கில் நண்பர் ரகுவுடன் கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் சென்றார். பைக்கானது மருதூர் அருகே சென்ற போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் நவீன்குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த ரகு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்டப் பள்ளிகளில் செயல்பட்டும் சத்துணவு சமையல் மையங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், 24 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இவை வட்டாரம் வாரியாக நடைபெறும். இந்தப் பணிக்கு 21 முதல் 40 வயது வரை பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் https//karur.nic.in/ என்ற இணைய தளத்தில் கிடைக்கும். கடைசித் தேதி: 27.02.2026. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!