News October 6, 2025

கரூர்: B.E/B.Tech பட்டதாரிகளுக்கு செம வாய்ப்பு!

image

கரூர் மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க அக்.20ஆம் தேதியே கடைசி நாள். செம வாய்ப்பு.., உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 16, 2025

கரூர்: யுபிஎஸ்சி தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் மாணவன்!

image

கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்.டி. ஆய்வு மேற்கொண்டு வரும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கூட்டக்காரன்பட்டி சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளர் சி. முனியாண்டி (30), யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார். அவருக்கு சிறந்த நூலக பயன்பாட்டாளர் விருதை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுதா வழங்கி பாராட்டினர்.

News November 15, 2025

சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

image

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் குளித்தலை நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்திய பிரியா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூபாய் 25000/- பெற்றுள்ளார். அதேபோல 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜமுனா என்பவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.15000/- ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.

News November 15, 2025

கரூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

image

குளித்தலை அடுத்த நெய்தலூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(35). இவர் வெண்ணைமலை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன் தான் பணிபுரியும் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமிக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி புகார் அளிக்கையில் கரூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

error: Content is protected !!