News January 12, 2026
கரூர்: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இப்பணிக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (SHARE)
Similar News
News January 27, 2026
கரூர் அருகே விபத்தில் இருவர் பலி!

கரூரில் நடந்த இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். மண்மங்கலம் அருகே கார் மோதியதில் மொபட்டில் சென்ற சுப்பிரமணி (55) பலியானார். வாங்கல் போலீசார் இதனை விசாரிக்கின்றனர். மற்றொரு விபத்தில், டி.செல்லாண்டிபாளையம் அருகே பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியதில் வடமாநில வாலிபர் சுர்ஜித் பவுரியா (20) உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News January 27, 2026
கரூர் அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது!

கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியைச் சேர்ந்த 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பொக்லைன் ஆபரேட்டர் கோபிநாத் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ள அந்தச் சிறுமி அளித்த தகவலின்படி, குழந்தைகள் நல அலுவலர் புகாரளித்தார். இதன்பேரில் குளித்தலை மகளிர் போலீசார் கோபிநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 27, 2026
கரூர் அருகே சோகம்: சிறுவன் மர்ம மரணம்

கரூர் மாவட்டம் குப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் மகேஸ்வரன், நேற்று தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவரது தாய் தீபா அளித்த புகாரின் பேரில், நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


