News September 15, 2025
கரூர்: 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

கரூர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, ▶️அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்▶️ ஒரு முறை சோலார் பேனலை நிறுவிவிட்டால் போதும், அதிர்ச்சி அளிக்கும் மின்சார கட்டணம் பற்றிய கவலையை விட்டுவிடலாம்
Similar News
News September 15, 2025
மருதூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து!

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளித்தலை அருகே மருதூர் சோதனை சாவடியில் இன்று காலை 10 மணி அளவில் பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் வெளியூர் பயணம் மேற்கொண்டு பெட்டவாய்த்தலை வந்து கொண்டிருந்தபோது, தூக்கத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் பாஸ்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News September 15, 2025
வரும் 20ல் ஓரணியில் தமிழக பொதுக்கூட்டம்!

கரூர்:வரும், 20ல் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நடக்கிறது,” என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு மூலம் ஒரு கோடி பேர், தி.மு.க.,வின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஓட்டுச்சாவடி அளவில் உறுதிமொழி ஏற்றனர்.
News September 15, 2025
கரூரில் விபத்தில் இளைஞர் படுகாயம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ஜெய பிரதாப் 21. இவர் நேற்று தனது ஸ்கூட்டியில் பிச்சம்பட்டி சாலையில் வந்த போது எதிரே ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதியதில் ஜெயபிரதாப் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.