News September 12, 2025
கரூர்: வெறி நாய்கள் அட்டூழியம்!

கரூர்: பள்ளப்பட்டி பகுதியில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில், யாசர் அன்சாரி என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்தன. இந்தத் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News September 12, 2025
கரூர்: ஆற்றுப் படுகையில் கிடந்த ஆண் சடலம்

கரூர்: வேலாயுதம்பாளையம் தாலுக்கா பழனி முத்து நகர் அருகே உள்ள காவேரி ஆற்றுப்படுகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். நஞ்சை புகலூர் கிராமம் விஏஓ ரவி புகாரில் வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று(செப்.11) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 12, 2025
கரூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்கே போங்க!

கரூர் மக்களே.., நமது மாவட்டத்தில் நாளை(செப்.13) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். காலை 10:00 – 1:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். உடனே SHARE!
News September 12, 2025
கரூர்: ரிசர்வ் வங்கி அலுவலர் வேலை!

▶️கரூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இப்பணிக்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, மற்றும் நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
▶️விண்ணப்பிக்க செப்.30ஆம் தேதியே கடைசி நாள்
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!