News March 19, 2024

கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 27, 2026

கரூர் அருகே சோகம்: சிறுவன் மர்ம மரணம்

image

கரூர் மாவட்டம் குப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் மகேஸ்வரன், நேற்று தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவரது தாய் தீபா அளித்த புகாரின் பேரில், நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 27, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிப்பது இதன் முக்கிய நோக்கம் எனவும், அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!