News April 2, 2024

கரூர்: வியாபாரியிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

image

கேரளாவை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கோபால் மகன் தினேஷ் என்பவர் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து வாழைக்காய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News

News April 6, 2025

கரூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

image

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது கரூரில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும்.

News April 6, 2025

கரூரில் கவிழ்ந்த கல்லூரி பஸ் ; 7 பேர் படுகாயம் 

image

கரூர்: அரவக்குறிச்சி அருகே, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்க், நேற்று(ஏப்.5) காலை, 38 மாணவர்களை அழைத்துச் சென்ற கல்லுாரி பஸ், அரவக்குறிச்சி அருகே, சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். 

News April 5, 2025

வாழ்வை பாசிட்டிவ் ஆக்கும் விகிர்தீஸ்வரர்!

image

வாழ்வில் பல்வேறு மன அழுத்தம், வெறுமை, சலிப்பு உள்ளவர்களின் எண்ணங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும் கடவுளாக நம்பப்படுபவர் கரூர் மாவட்டத்தில் உள்ள விகிர்தீஸ்வரர். விகிர்தீஸ்வரர் என்றாலே நன்மை தருபவர் என்று அர்த்தம். இந்தக் கோயிலில் இவரை தரிசித்து விட்டுதிரும்பும் போது கூட படி ஏறி தான் செல்ல வேண்டும். அந்த தருணம் முதலே தரிசித்தவர் வாழ்க்கைப் படியும் ஏறுமாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!