News October 21, 2025
கரூர்: விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாப பலி!

கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலை, க.பரமத்தி பகுதியில், முத்துக்கதிரவன் என்பவர் தனது மகன் ஜெகதீஸ்வரனுடன்(7) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியில் அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில், 7 வயது சிறுவன் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 3, 2026
கரூரில் இலவசமாக ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும்.
News February 3, 2026
கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


