News January 3, 2026

கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News January 25, 2026

கரூரில் தட்டி துக்கிய EX அமைச்சர்!

image

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தளவாபாளையம் எம்.ஆர்.பி. மூர்த்தி, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக பிரமுகரின் இந்த அதிரடி மாற்றம் கரூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 24, 2026

கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

கரூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

கரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!