News January 3, 2026
கரூர்: வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி அடுத்த காரைக்குடியைச் சேர்ந்தவர் அழகப்பன் (75). இவர் கடந்த வாரம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் கள்ளை மாரியம்மன் கோவில் செல்வதற்காக கே. துறையூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மகன் சுதாகர் புகாரில் தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 25, 2026
குளித்தலை: வாலிபர் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் தமிழ்ச்சொலையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் வயிறு வலியால் துடித்துக் கொண்டிருந்தவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் 10க்கும் மேற்பட்ட ஆணிகளை முழுங்கியது தெரிய வந்தது. தொடர் சிகிச்சையில் அவர் உயிரிழந்தார்.
News January 25, 2026
குளித்தலை அருகே 6 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டம் பாலவிடுதி, லாலாபேட்டை, நங்கவரம், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற தங்கராசு 60, மலர் 49, ரேவதி 55, பழனிவேல் 47, ராமசாமி 60, சின்னத்தம்பி 47 ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 152 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
News January 25, 2026
கரூர் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கரூர் மாவட்ட மக்கள் 04324225100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


