News May 8, 2024
கரூர் வறட்சி மாவட்டமாக மாறியது

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றதால் வறட்சியின் கோர தாண்டவத்தால் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். காவிரி மற்றும் அமராவதி, நொய்யல், குடகனாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் கை கொடுக்காததால் இன்று கரூர் மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
Similar News
News January 31, 2026
கரூர் செய்தியாளர்களுக்கு நேர்ந்த கதி: விஜயபாஸ்கர் கண்டனம்

கிருஷ்ணராயபுரம் அருகே கனிமவள கொள்ளையை செய்தி சேகரிக்க செய்தியாளர் கதிரவன்,ஒளிப்பதிவாளர் செபஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என EX எம்.ஆர்.விஜயபாஸ்கர் கண்டனம்: மேலும்
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி முன்னிலையிலேயே, செய்தியாளர்களை தாக்கியுள்ளனர். இது சட்டத்தின் ஆட்சியா? இல்லை ரவுடிகளின் ராஜ்ஜியமா? என கேள்வி
News January 31, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.