News October 21, 2025
கரூர்: வட மாநில கொத்தனார் பரிதாப பலி!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சதாம் அன்சாரி(36). இவர் கரூரில் உள்ள அம்பாள் நகரில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.20) அம்பாள் நகர் கணேஷ் என்பவரின் கட்டடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நெஞ்சு வலியால் கீழே விழுந்ததில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 30, 2026
கரூரில் சோகம்: வாலிபர் பலி

கரூர் கொக்காம்பட்டி டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் போர்டலி (23), பணியின்போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிறுவன மேலாளர் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கரூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

கரூர் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<
News January 30, 2026
கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


