News January 22, 2026
கரூர்: வசமாக சிக்கிய மூவர் கைது

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் மற்றும் கரூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து நேற்று அங்கு சென்ற போலீசார் புகையிலை விற்ற ராமகிருஷ்ணன் 51, ஹரிராம் 29, பாலசுப்பிரமணி 41 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 26, 2026
கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)
News January 26, 2026
BREAKING: கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு (28.01.2026) அன்று கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை) அலுவலக நாளாக நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
News January 26, 2026
கரூர்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.


