News December 22, 2025
கரூர்: லாட்டரி விற்றவருக்கு காப்பு!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொசூர் கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து திருச்சி மணப்பாறை சேர்ந்த ராஜேந்திரன் (59) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வசம் இருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News December 24, 2025
கரூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும் இணைந்து 29.12.2025 முதல் 18.01.2026 முடிய 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு, இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு சிகிச்சை 8 வது சுற்றுப் பணி அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ், கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
கரூர் அருகே அதிரடி கைது; போலீசார் நடவடிக்கை

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக பெண்ணின் தாயார் புகார் கொடுத்திருந்தார். மேலும் நங்கவரம் போலீசார் சிசிடிவி மூலமாக தேடிய நிலையில், நேற்று இரவு கடத்தி சென்ற ரஞ்சித் என்பவரை அதிரடியாக மடக்கிப்பிடித்து நங்கவரம் போலீசார் கைது செய்து பெண்ணை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
News December 23, 2025
கரூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

கரூர் மாவட்டம், சின்னாண்டாங் கோவில் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவரின் மனைவி குடும்ப சண்டையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த பப்லு மன விரக்தியில் நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


