News February 6, 2025
கரூர்: ரயில் சேவையில் மாற்றம்

கரூர் திருச்சி மார்க்கத்தில் வீரராக்கியம் பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (பிப்.7) ரயில்களின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை வந்து கரூரில் நின்று விடும். மயிலாடுதுறை சேலம் பயணிகள் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் கிளம்பி வீரராக்கியத்தில் நின்றுவிடும். சேலம் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மதியம் 3.40 கரூரில் இருந்து கிளம்பும்.
Similar News
News April 21, 2025
கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 20, 2025
வாழ்வில் ஏற்றம் தரும் கல்யாண விகிர்தீஸ்வரர்

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
கரூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.