News April 20, 2024
கரூர்; மொத்த வாக்குகள் நிலவரம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதன்படி 12 மணி நிலவரப்படி மொத்தமாக 78.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 11, 2026
கரூர்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு!

கரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க!
News February 11, 2026
கரூர்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

கரூர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
கரூர் வாக்காளர்கள் கவனத்திற்கு!

கரூர் மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


