News December 16, 2025
கரூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.
Similar News
News December 19, 2025
கரூர்: ரூ.1 லட்சம் மானியம் – கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 40 சதவீதம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
கரூர்: மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (டிச.20) தென்னிலை, க.பரமத்தி, நொய்யல், ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆண்டிசெட்டிப்பாளையம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், தென்னிலை, மொஞ்சனூர், பூலாம்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், குளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்காது.
News December 19, 2025
கரூர் துயரம்; விஜய் குறித்து பரபரப்பு போஸ்டர்கள்

கரூர் மாவட்டத்தில், வடிவேல் நகர் பகுதியில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதன் தொடர்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பற்றி தனித்துவ போஸ்டரால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில் இங்கிருந்து ஆடியோ லான்ச்சுக்கு மலேசியா செல்கிறீர்கள், மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிகிறீர்கள், ஏன் கரூருக்கு செல்லவில்லை என வாசகம் பதியப்பட்டிருந்தது.


