News February 22, 2025
கரூர் மாவட்ட காவலர்களுக்கு பதக்கம் வழங்கிய எஸ்பி

கரூர் மாவட்டத்தில் காவல்துறையில் 25 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 05 காவல் அலுவலர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அதி ‘உத்கிரிஸ் சேவாக்’ பதக்கமும் மற்றும் 20 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 04 காவல் அலுவலர்களுக்கு ‘உத்கிரிஸ் சேவாக்’ பதக்கத்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா IPS அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
கரூரில் இலவச விளையாட்டு பயிற்சி

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கையுந்து பந்து, ஜூடோ,கூடைப்பந்து, கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான இலவச கோடைக்கால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகட்திற்கு நேரடியாகவோ அல்லது 7401703493 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
News April 20, 2025
கரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 48 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <
News April 20, 2025
பித்தளை அண்டா ஏற்படுத்திய ரகளை: 7 பேர் மீது வழக்கு!

குளித்தலை அருகே கே.பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் கிருபானந்தன் பட்டவர்த்தியில் உள்ள தனது நண்பர் தாமு வீட்டில் பித்தளை அண்டா திருடி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தோர் சரமாரியாக அடித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பைக்கை பறித்துச் சென்றுள்ளனர். சாந்தி புகாரில் செல்வா, சேது, கௌதம், அழகேசன், கோபால், துரைப்பாண்டி, விக்னேஷ் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.