News October 1, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள்!

கரூரில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (02.10.2025) காலை 10 மணியளவில் தாந்தோணி மலை கதர் அங்காடியில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின் சிறப்பு விற்பனை துவக்கி வைத்து, மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி 10.15 மணியளவில் திருமுருகன் மஹாலில் (சுங்க கேட் அருகில்) ரிப்பன் வெட்டி கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல் துவக்கி வைக்க உள்ளார்.
Similar News
News April 3, 2026
கரூர் வரும் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் 18-ம் தேதி கரூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
News April 3, 2026
கரூர்: திமுகவின் முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கரூர் மத்திய பகுதி திமுக செயலாளர் அன்பரசு அதிமுகவில் இணைந்தார். கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவரான இவர், மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் திமுகவிலிருந்து விலகினார். தேர்தல் நெருங்கும் சூழலில், திமுகவின் முக்கிய நிர்வாகி மாற்றுக் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 3, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமனம்

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.2) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்ரல்.3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


