News November 16, 2024
கரூர் மாவட்டம் பல பகுதிகளில் மழை

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழையும்.
Similar News
News March 2, 2026
கரூரில் கடும் அவதிக்குள்ளாகும் போலீஸ்

கரூரில் கோடை தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தச் சூழலில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்குச் சூரியசக்தி தொப்பிகள் (Solar Caps), இளநீர், நீர்மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் உடல்நலனைக் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!
News March 2, 2026
கரூரில் வசமாக சிக்கிய மூவர்!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த்தாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரவிச்சந்திரன், செந்தில்குமார், வடிவேல் 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 2, 2026
கரூர்: இன்றைய மார்ச் 1ல் இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.1) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


