News December 29, 2025

கரூர் மாவட்டத்தில் 4 பேர் அதிரடி கைது!

image

கரூர், பசுபதிபாளையம், க. பரமத்தி, வாங்கல் ஆகிய காவல்நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற விக்கி (36), மாரியம்மாள் (67), அன்பழகன் (48), மலர்கொடி (55) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 30, 2025

கரூர்: மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555. ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 04324-296650. ▶️பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்- 04324-255305. ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04324-256508. ▶️மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 04324-256728. ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News December 30, 2025

BREAKING: கரூர் கலெக்டர், எஸ்.பி ஆஜர்

image

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று 2-வது நாளான விசாரணையில் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி ஜோஷ் தங்கையா ஆஜராகினர்.

News December 30, 2025

கரூர்: ரயில் சக்கரத்தில் சிக்கி பலி

image

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்தர் முருகேசன். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மங்களூரு – புதுச்சேரி விரைவு ரயிலில் கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!