News December 24, 2025
கரூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும் இணைந்து 29.12.2025 முதல் 18.01.2026 முடிய 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு, இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு சிகிச்சை 8 வது சுற்றுப் பணி அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ், கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
கரூரில் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சாதாரண பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தட்கல் பிரிவிற்கு மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
News December 26, 2025
கரூர்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; 4 பேர் கைது

கரூர் மாவட்டம் வெள்ளியணை, பசுபதிபாளையம், வாங்கல், மாயனூர் காவல் நிலைய எல்லைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய ரெய்டில் தமிழ்செல்வன் (36), கணேசன் (37), பிரபு (42), சிவானந்தம் (31) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


