News January 15, 2026
கரூர் மாவட்டத்தில் ஏழு பேர் அதிரடி கைது

கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, பாலவிடுதி, பசுபதிபாளையம், வாங்கல், வெங்கமேடு காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சத்யராஜ் (35), ரங்கராசு (39), மாணிக்கம் (52), பெரியக்காள் (66), கஜேந்திரன் (48), சுரேஷ் (40), செல்வி (50) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 153 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 24, 2026
கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
கரூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 24, 2026
கரூர் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருகே கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் மாற்றுத்திறனாளி மஞ்சள் காமாலை நோயினால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மனம் விரக்தியில் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரி மேற்கொண்டனர்.


